உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஐ.டி.ஐ.,களில் சேர மாணவ மாணவியருக்கு அழைப்பு

ஐ.டி.ஐ.,களில் சேர மாணவ மாணவியருக்கு அழைப்பு

குன்னுார்:குன்னுார் மற்றும் உப்பட்டி அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ..) பயிற்சியில் சேர மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.குன்னுார், பந்தலுார் உப்பட்டியில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளன. இவற்றில் நடப்பாண்டுக்கான மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இரு பயிற்சி நிலையங்களிலும், பிட்டர், கம்மியர் (மோட்டார் வண்டி), கம்மியர் வயர்மேன், வெல்டர், அட்வான்ஸ் சி.என்.சி., மெக்கானிக் டெக்னீசியன், மின்னணு வாகன மெக்கானிக் உட்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.மேலும், குன்னுாரில், 'ரெப்ரிஜிரேட்டர் அண்ட் ஏர் கண்டிஷனிங் டெக்னீசியன், எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக் மெக்கானிக் பயிற்சிகளும், உப்பட்டியில் பிளம்பர்' பயிற்சியும் தனியாக அளிக்கப்படுகிறது.மாதம், 750 ரூபாய் உதவித்தொகை, கட்டணமில்லா பஸ் பாஸ், விலையில்லா சைக்கிள், பாட புத்தகம் வரைபடக் கருவிகள், சீருடை, காலணிகள் வழங்கப்பட உள்ளன.நேர்காணல் மூலம் அரசு மற்றும் முன்னணி தனியார் நிறுவனங்களில் தொழில் பழகுநர் பயிற்சி அளிக்கப்படுகிறது .மாணவியருக்கு புதுமை பெண் திட்டத்தில், 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது அந்தந்த பிரிவுகளுக்கு ஏற்ப, 8ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி, பெற்றவர்கள் மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ், ஜாதி சான்றிதழ் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும் இதற்காக, குன்னுார் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி, பந்தலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில், 31ம் தேதி (இன்று), ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, கூடலுாரில் அரசு நடுநிலைப்பள்ளியில் மே 6ம் தேதி, கோத்தகிரி, மஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளிகளில்,7ம் தேதி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை