உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கமிஷனருக்கு தெரியாமல் கட்டுமான பணி குன்னுாரில் நடந்த ஆய்வில் தெளிவு

கமிஷனருக்கு தெரியாமல் கட்டுமான பணி குன்னுாரில் நடந்த ஆய்வில் தெளிவு

குன்னுார்:குன்னுார் மார்க்கெட்டில் நகராட்சி அனுமதியின்றி ஆளும் கட்சியினர் ஆதரவுடன் கடைகள் இடித்து புதுப்பிப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.குன்னுார் மார்க்கெட்டில், 724 கடைகள் உள்ளன. மார்க்கெட் வளாக பகுதிகளில் நகராட்சி சார்பில் பராமரிப்பு பணிகள் நடக்காமல் உள்ளது. இதேபோல பல கடைகள் உள்வாடகைக்கு விடப்பட்டுள்ளது. மார்க்கெட்டில் உள்ள கடைகளை இடித்து கட்டுவதற்கும், பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்கும் கூட ஆளும் கட்சி கவுன்சிலர்கள், சில நகராட்சி அதிகாரிகள் மூலமாக குளறுபடிகள் நடப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.சமீபத்தில் துருவம்மன் கோவில் எதிரே உள்ள ஒரு கடை, ஆளும் கட்சியினரால், பேரம் பேசி மற்றொருவர் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், இப்பகுதியில் விதிகளை மீறி, கட்டட கட்டுமான பணிகளை சிலர் மேற்கொண்டு வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.தகவலின் பேரில், நேற்று நகராட்சி கமிஷனர் சசிகலா திடீர் ஆய்வு மேற்கொண்ட போது, 'நகராட்சி அனுமதி இல்லாமல் கட்டடத்தை இடித்து கட்ட அனுமதி அளித்தது யார்,' என்று கேள்வி எழுப்பினார். இதற்கான முழு விபரங்களை அதிகாரிகளிடம் அளிக்குமாறு கமிஷனர் தெரிவித்தார்.கமிஷனர் சசிகலா கூறுகையில்,''இந்த கட்டடம் குறித்து விசாரணை நடத்தி எடுக்கும் நடவடிக்கை குறித்து பின்னர் தெரிவிக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை