மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
ஊட்டி: குன்னுாரில் தேயிலை வாரிய அதிகாரி வீட்டில், 6 பவுன்நகை திருடப்பட்டது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். குன்னுார் அருவங்காடு, பாலாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் விவேக், 35. குன்னுரில் உள்ள தென்னிந்திய தேயிலை வாரிய அலுவலகத்தில் மதிப்பீட்டு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள தேயிலை வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்காக கடந்த வாரம் சென்றார். இந்நிலையில், இவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதாக அருகில் வசிப்பவர்கள் விவேக்கை தொடர்பு கொண்டு தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த விவேக் உடனடியாக அருவங்காடு பகுதிக்கு விரைந்து வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பார்த்த போது, 'பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த தங்க வளையல், செயின், வெள்ளி குத்துவிளக்கு, வெள்ளி கோப்பை உள்ளிட்டவைகள்,' என, 6 பவுன் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக, விவேக், அருவங்காடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். முதல் கட்டமாக கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக, டி.எஸ்.பி., குமார் தலைமையில் குற்றப்பிரிவு போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி வந்தனர். கோவை மாவட்டம் கவுண்டர்மில் என்.பி.சி., காலனியை சேர்ந்த வனராஜ்,43, குற்றவாளி என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.போலீசார் கூறுகையில், 'பல்வேறு இடங் களுக்கும் செல்லும் வனராஜ் பழைய இரும்பு பொருட்களை வாங்கி சென்று விற்பனை செய்து வந்துள்ளார். இதே போல வந்து இங்கு திருடியது தெரிய வந்தது. ஏற்கனவே வனராஜ் மீது திருப்பூர் கன்னியா குமரி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் திருட்டு வழக்குகள் உள்ளன,' என்றனர்.
03-Oct-2025