உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கோக்கால் வீடுகளில் தொடரும் விரிசல் மருத்துவமனை பணிக்கு மண் அகற்றியதால் பாதிப்பு?

கோக்கால் வீடுகளில் தொடரும் விரிசல் மருத்துவமனை பணிக்கு மண் அகற்றியதால் பாதிப்பு?

கூடலுார்;'மேல் கூடலுார் கோக்கால் பகுதியில், வீடுகளில் ஏற்பட்ட விரிசலுக்கு, அரசு மருத்துவமனை புதிய கட்டடத்திற்காக மண் அகற்றப்பட்டது முக்கிய காரணம்,'என, மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். நீலகிரி மாவட்டம், கூடலுாரில், கடந்த 28ம் தேதிபெய்த மழையின் போது, மேல் கூடலுார் அருகே, கோக்கால் ஒன்றரை சென்ட் குடியிருப்பு பகுதியில் சில வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் அச்சமடைந்துள்ளனர். அப்பகுதியை ஆய்வு செய்த வருவாய் துறையினர், 'விரிசல் ஏற்பட்டுள்ள வீடுகளில், இரவில் யாரும் வசிக்க கூடாது,' என, அறிவுறுத்தினர்.இந்நிலையில், தற் போது பெய்து வரும் பருவமழை காரணமாக, அப்பகுதியில் மீண்டும் வீடுகள்; முதியோர் இல்ல கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டு, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் உறவினர் வீடுகளில் தங்கி வருகின்றனர். பலர் வீடுகளில் உள்ள பொருள்களை காலி செய்யத் துவங்கி உள்ளனர்.கவுன்சிலர் கலைவாணி மற்றும் பொதுமக்கள் கூறுகையில், 'பல ஆண்டுகளாக, மழையின் போது இதுபோன்று எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தற்போது, குடியிருப்புக்கு கீழ்ப்பகுதியில், அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக, பெருமளவில் மண் அகற்றப்பட்டதால், வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும்,' என்றனர்.கூடலுார் ஆர்.டி.ஓ., செந்தில்குமார் கூறுகையில், ''வீடுகளிலில் விரிசல் ஏற்பட்டது குறித்து, இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆய்வுக்குப் பின், விரிசல் ஏற்பட்டதற்கான காரணம் தெரிய வரும். அதன் அடிப்படையில் மாற்று நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும். பாதிப்பு குறித்து மக்கள் கூறும் காரணங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்படும்,'என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை