வாசகர்கள் கருத்துகள் ( 1 )
குன்னூர் பகுதியில் அரசியல் வாதிகளின் விதி மீறல்களுக்கு சட்டமும் அரசு அலுவலர்களும் எதுவும் செய்ய முடியாது என்பதால் இயற்கை நடவடிக்கை எடுக்கிறது....
மேலும் செய்திகள்
அணைகள் நீர்மட்டம்
23 hour(s) ago
குன்னுார்;குன்னுாரில் ஆற்றோர ஆக்கிமிப்பில் இடிந்து அந்தரத்தில் தொங்கும் டீக்கடை மீண்டும் சிறிது சிறிதாக இடிந்து வருகிறது.குன்னுார் பஸ் ஸ்டாண்ட், டி.டி.கே., சாலை ஆட்டோ ஸ்டாண்ட் எதிர்புறம் ஆற்றோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கடந்த, 2019ல் ஐகோர்ட் உத்தரவிட்டது. அதில், பல கடைகள் இடிக்கப்பட்டன. இந்நிலையில், பஸ் ஸ்டாண்ட் எதிரே கடைகள் இடிக்க 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது. எனினும் சில ஆளும் கட்சியினர் நிர்பந்தத்தால் தடுத்து நிறுத்தப்பட்டது.கடந்த மாதம், 31ம் தேதி டீக்கடையின் ஒரு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு அந்தரத்தில் தொங்கியதால் கடை நடத்த வருவாய் துறையினர் தடை விதித்தனர். தொடர்ந்து, ஏற்கனவே பாதி இடிந்து பயன்படுத்தாமல் இருந்த ஒரு ஆக்கிரமிப்பு பேக்கரி வருவாய்துறை சார்பில் இடிக்கப்பட்டது.இந்நிலையில், நேற்று முன்தினம் அந்தரத்தில் தொங்கி காணப்பட்ட டீக்கடையின் பெருமளவு மீண்டும் சரிந்து விழுந்தது. தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதால் மழை தீவிரமடைந்தால் அருகில் உள்ள கடைகளும் பாதிக்கும் சூழ்நிலை உள்ளது. சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ' இப்பகுதியில் வரும் பருவ மழையின் போது பெரிய பாதிப்பு ஏற்படும் முன்பு அதனை தடுக்க வருவாய் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.
குன்னூர் பகுதியில் அரசியல் வாதிகளின் விதி மீறல்களுக்கு சட்டமும் அரசு அலுவலர்களும் எதுவும் செய்ய முடியாது என்பதால் இயற்கை நடவடிக்கை எடுக்கிறது....
23 hour(s) ago