மேலும் செய்திகள்
பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்
10-Oct-2025
வீட்டை இடித்த யானைகள்; வனத்துறையினர் ஆய்வு
10-Oct-2025
குன்னுார்;குன்லுார் பகுதிகளில் மழையின் அளவு குறைந்ததால், ரேலியா அணையின் நீர்மட்டம் உயராமல் உள்ளது.மாவட்டத்தில், ஊட்டி, கூடலுார், பந்தலுார், குந்தா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் நீராதாரங்கள் நிரம்பின. ஆனால், குன்னுார் பகுதிகளில் மழையின் தாக்கம் குறைந்து காற்றின் வேகம் மட்டுமே அதிகமாக இருந்தது. இதனால், குன்லுார் பகுதிகளில் உள்ள நீர் ஆதாரங்கள் நிரம்பாமல் உள்ளது.குறிப்பாக, குன்னுார் நகராட்சி வார்டுகளின் குடிநீர் ஆதாரமான, 43.7 அடி கொள்ளளவு கொண்ட ரேலியா அணையின் நீர்மட்டம் உயராமல், 10 அடியில் மட்டுமே நீர் இருப்பு உள்ளது. சில இடங்களில் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.அதே நேரத்தில் எமரால்டு கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து வரும் குடிநீர், குன்னுார் பகுதிகளில் தொடர்ந்து வினியோகம் செய்யப்பட்ட வருவதால் குடிநீர் தட்டுப்பாடு குறைந்துள்ளது.
10-Oct-2025
10-Oct-2025