உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நீர்மட்டம் சோலையில் மலபார் அணில்: சுற்றுலா பயணிகள் வியப்பு

நீர்மட்டம் சோலையில் மலபார் அணில்: சுற்றுலா பயணிகள் வியப்பு

பந்தலூர்;கூடலுார் வன கோட்டத்திற்கு உட்பட்ட பந்தலூர் மற்றும் கூடலூர் வனப்பகுதிகள், கோடை வெயிலின் தாக்கத்தால் காய்ந்து கருகி வருகிறது.இதனால் பசுமையாக காணப்பட்ட வனப்பகுதிகள் தற்போது பசுமை இழந்து வறட்சி நிறைந்த வனமாக மாறி வருகிறது.சாலை ஓரம் வனப்பகுதிகள் மற்றும் புதர்களில் காணப்பட்ட, பறவைகள் மற்றும் வன விலங்குகள் இடம்பெயர்ந்து, அடர்த்தியான சோலைகள் மற்றும் நீர்நிலைகளை நாடி செல்கின்றன.அதில், பந்தலுாரில் இருந்து கூடலுார் செல்லும் சாலையில், நீர்மட்டம் என்ற பகுதி சோலைவனமாக காட்சி தருகிறது. இங்குள்ள மரங்களில் உணவு தேடி மலபார் அணில்கள் அதிக அளவில் வந்து செல்கிறது. இதனை பார்க்கும் சுற்றுலா பயணிகள் வியந்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி