உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கூடலுாரில் வணிகர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்

கூடலுாரில் வணிகர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்

கூடலுார், ; கூடலுாரில் வணிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூடுதல் செயலாளர் பாதுஷா வரவேற்றார். முன்னாள் தலைவர் அப்துல் ரசாக் தலைமை வகித்தார்.விழாவில், வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா பேசுகையில், ''நீலகிரியில் தொடரும் 'பிளாஸ்டிக்' பிரச்னையால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அதிகாரிகள் கடைகளுக்கு அபராதம் விதித்து, 'சீல்' வைக்கும் நடைமுறையை கைவிட வேண்டும். நீலகிரி வரும் 'பிளாஸ்டிக்' பொருட்களை உற்பத்தி செய்யும் இடத்தில் தடுக்க வேண்டும். மே, 5ம் தேதி, செங்கல்பட்டில் 'வணிகர்கள் அதிகார மாநாடு' நடக்கிறது. நீலகிரியில் இருந்து, 10 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர்,'' என்றார்.தொடர்ந்து, கூடலுார் நகர வணிகர் சங்க புதிய தலைவராக முகமது சபி, செயலாளர் சம்பத்குமார், பொருளாளர் ஆனந்தன் உட்பட பிற நிர்வாகிகள் பொறுப்பேற்று கொண்டனர்.கூட்டத்தில், மாநில துணைத் தலைவர் தாமஸ், மாவட்ட தலைவர் முகமது பாரூக், செயலாளர் குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நகர பொருளாளர் ஆனந்தன் நன்றி கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ