மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
குன்னுார்';'குன்னுார் நெடுஞ்சாலை இடத்தில் வாகன 'பார்க்கிங்' கட்டணம் வசூலிப்பதை தடுத்து, தோட்டக்கலை துறை இடத்தில் பார்க்கிங் தளம் அமைக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.குன்னுாரில் உள்ள முக்கிய சுற்றுலா மையமான சிம்ஸ்பார்க் பகுதியில் பார்க்கிங் வசதி தனியாக ஏற்படுத்தப்படவில்லை. இதனால் சுற்றுலா வாகனங்கள் சாலையோர இடத்தில் நிறுத்தப்படுகிறது.மாநில நெடுஞ்சாலை இடத்தில் நிறுத்தும் வாகனங்களுக்கு விதிகளை மீறி 'பார்க்கிங் கட்டணம்' வசூலிக்க நகராட்சி சார்பில் ஏலம் விடப்பட்டு, கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.நடப்பாண்டு மே மாதம் முதல்,12 மாதங்களுக்கு, 8.55 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது.தற்போது, சிறிய வாகனங்களுக்கு, 20;வேன், பஸ்களுக்கு 50 ரூபாய் என கட்டணம் நிர்ணயம் செய்து வசூலிக்கப்படுகிறது. இங்கு பார்க்கிங் கட்டணம் வசூலித்தாலும், தனியாக இலவச கழிப்பிட வசதிகள் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை. திடீரென எழுந்த சர்ச்சை
இப்பகுதியில், நெடுஞ்சாலை இடத்தில் நகராட்சி சார்பில் ஏலம் விட்டு நகராட்சி பார்க்கிங் கட்டணம் வசூலிப்பது ஏற்கனவே சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சாலையோரம் நிறுத்தும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. பழ கண்காட்சி நாட்களில் அந்தோணியார் பள்ளியில் வாகனங்கள் நிறுத்தி அதற்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஓரளவு குறைக்கப்படுகிறது. இந்நிலையில், ஊட்டியில் நெடுஞ்சாலை இடத்தில் இதே போன்று'பார்க்கிங்' கட்டண வசூல் செய்து வந்தது தடுக்கப்பட்டது. மக்கள் கூறுகையில்,'குன்னுாரில் நடக்கும் குளறுபடியை தடுக்க அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். தோட்டக்கலை துறைக்கு சொந்தமான இடத்தில் பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும். அப்பகுதியில் உள்ள மரங்களை வெட்டாமல் இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.
03-Oct-2025