உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நீட் நுழைவுத் தேர்வு; அரசு பள்ளி மாணவிகள் சாதனை

நீட் நுழைவுத் தேர்வு; அரசு பள்ளி மாணவிகள் சாதனை

மேட்டுப்பாளையம் : மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியானதில், வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த, இரண்டு மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு, கடந்த மாதம் நடைபெற்றது. இதில் காரமடை அருகே உள்ள, வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த, ஐந்து மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். நேற்று முன் தினம் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் இப்பள்ளியை சேர்ந்த தபாசினி தலாய், 296 மதிப்பெண்களும், பிரியதர்ஷினி, 162 மதிப்பெண்கள் பெற்று, தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டு மாணவிகள் இளநிலை மருத்துவ படிப்புக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று, பள்ளிக்கு பெருமையை சேர்த்துள்ளனர். இந்த மாணவிகளுக்கு தேர்வுக்கான பயிற்சிகளை அளித்த ஆசிரியர்களையும், மாணவிகளையும், பள்ளி தலைமை ஆசிரியர் சாக்ரடீஸ் குலசேகரன், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ராமதாஸ், பள்ளி மேலாண்மை குழு தலைவர் பேபி ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை