உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / விரிவான சாலை கான்ரீட் தளம் இல்லை

விரிவான சாலை கான்ரீட் தளம் இல்லை

கோத்தகிரி:கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் முள்ளூர் அருகே, விரிவு படுத்தப்பட்ட பகுதிகளில், 'கான்ரீட்' தளம் அமைக்காததால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.கோத்தகிரி-மேட்டுப்பாளையம் இடையே, அரசு பஸ்கள் உட்பட நுாற்றுக்கணக்கான வாகனங்கள், நாள்தோறும் சென்று வருகின்றன. போக்குவரத்தில் நிறைந்த இச்சாலை, மிக நேர்த்தியாக சீரமைக்கப்பட்டு நெடுஞ்சாலை துறை விரிவுபடுத்தியுள்ளது. ஆனால், விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளில் கான்ரீட் தளம் அமைக்கவில்லை. கற்கள் மற்றும் மண் திட்டுகள் அப்படியே விடப்பட்டுள்ளதால், வாகனங்கள் வளைவில் திரும்பும் போது விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது.எனவே, முக்கியமான இச்சாலை வளைவுகளில் கான்ரீட் தளம் அமைத்து, வாகனங்கள் சிரமம் இல்லாமல் சென்று வர நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுப்பது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை