உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சாலை பராமரிப்பு இல்லை சுற்றுலா பயணிகள் அதிருப்தி

சாலை பராமரிப்பு இல்லை சுற்றுலா பயணிகள் அதிருப்தி

கூடலுார்:கூடலுார் நாடுகாணியில் வாகன நுழைவு வரி வசூல் செய்தும், தமிழக -கேரள எல்லையில் சேதமடைந்து வரும் சாலையை சீரமைக்க நடவடிக்கை இல்லாததால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.கூடலுார்- கோழிக்கோடு சாலை நாடுகாணியிலிருந்து, கீழ்நாடுகாணி வழியாக, மலப்புரம், திருச்சூர், பாலக்காடு, உள்ளிட்ட கேரள மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு செல்லும் சாலை பிரிந்து செல்கிறது. இச்சாலை, தமிழக, கேரளா, கர்நாடகத்தில் இணைக்கும் முக்கிய வழித்தடம் என்பதால் எப்போதும் வாகன போக்குவரத்து இருக்கும். கேரளாவிலிருந்து இவ்வழியாக, நீலகிரி மாவட்ட பதிவு எண் கொண்ட வாகனங்களை தவிர்த்து, பிற வாகனங்களுக்கு நாடுகாணியில் வாகன நுழைவு வரி வசூல் செய்து வருகின்றனர்.தமிழக - கேரளாவை இணைக்கும் இந்த சாலையில், நாடுகாணி முதல் மாநில எல்லையான கீழ்நாடுகாணி வரையிலான, 6 கி.மீ., துாரம் தமிழக பகுதியில் உள்ளது. பல இடங்களில், சாலை சேதமடைந்துள்ளது.இவ்வழியாக, நீலகிரிக்கு வரும் வாகனங்களுக்கு, அரசு நுழைவு கட்டணம் வசூல் செய்தும், சேதம் அடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை இல்லாததால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.ஓட்டுனர்கள் கூறுகையில், 'கேரளாவில் இருந்து இவ்வழியாக பயணிக்கும் அனைத்து வாகனங்களுக்கும் நுழைவு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. ஆனால், இப்பகுதியில் சேதமடைந்த சாலை பராமரிக்க நடவடிக்கை இல்லை. தவறாது நுழைவு வரி வசூல் செய்வது போன்று, சேதமடைந்த பகுதிகளை தவறாமல் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை