மேலும் செய்திகள்
ராணுவ போர் தளவாட பொருட்களுக்கு ஆயுத பூஜை
7 hour(s) ago
கோவிலில் நடந்த பரதநாட்டிய நிகழ்ச்சி அசத்தல்
7 hour(s) ago
காமராஜர் சதுக்கத்தில் காந்தி ஜெயந்தி விழா
7 hour(s) ago
மேட்டுப்பாளையம்;காரமடை அருகே இருளர்பதி கிராமத்தில், குடிநீர், பஸ் வசதி இல்லாமல் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கெம்மாரம்பாளையம் ஊராட்சியில் இருளர்பதி கிராமம் உள்ளது. இக்கிராம மக்கள் அருகில் உள்ள விவசாய நிலங்களில் கூலி வேலைக்கு சென்றும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலைக்கு சென்றும் வருகின்றனர்.இப்பகுதியில் சுமார் 25 வீடுகள் உள்ளன. இக்கிராமத்திற்கு அருகில் நேரு நகர் உள்ளது. அங்கும் 20க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இருளர்பதி கிராமத்திற்கு பஸ் வசதி கிடையாது. அதே போல் குடிநீர் வசதியும் கிடையாது. இங்கு ஒரு மேல்நிலை தண்ணீர் தொட்டி உள்ளது. அதில் போர் தண்ணீர் மட்டுமே நிரப்பப்படுகிறது. அந்த தண்ணீரை தான் இப்பகுதி மக்கள் குடித்து வருகின்றனர். இக்கிராமத்தில் இருந்து 10 மேற்பட்ட குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்கின்றனர். பஸ் வசதி இல்லாததால் கண்டியூர் வரை 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பஸ் ஏறுகின்றனர். இப்பகுதியில் மாலை 6 மணிக்கு மேல் வனவிலங்குகள் நடமாட்டம் இருக்கும்.இதுகுறித்து இருளர்பதி மக்கள் கூறுகையில், 'பஸ் வசதி இல்லாததால் மாலை நேரம் ஆனதும் வீடுகளுக்குள் முடங்கி விடுவோம். கூலி வேலைக்கு செல்லும் நாங்கள் மாலை 6 மணி ஆனதும் பயந்து, பயந்து தான் ஊருக்கு வர வேண்டியுள்ளது. ஆட்டோ அல்லது வாடகை காரில் வரும் அளவுக்கு வசதி இல்லை.எங்கள் குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்ல 3 கிலோ மீட்டர் தூரம் நடக்கின்றனர். உப்பு தண்ணீரை குடித்து படிக்கின்றனர். எங்கள் பகுதிக்கு காலை மற்றும் மாலை இரு வேலையாவது பஸ் வசதி செய்து தரப்பட வேண்டும். குடிநீர் குழாய்கள் அமைத்து தர வேண்டும், என்றனர்.இதுகுறித்து கெம்மாரம்பாளையம் ஊராட்சி தலைவர் செல்வி நிர்மலா கூறுகையில், குடிநீர் குழாய்கள் பதிக்க ஆர்டர் வந்துள்ளது. விரைவில் அதற்கான பணிகள் துவங்கப்படும். பஸ் வசதி செய்து கொடுக்கப்படும், என்றார்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago