உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தாறுமாறாக இரு சக்கர வாகனங்கள் விபத்து அபாயத்தால் மக்கள் அச்சம்

தாறுமாறாக இரு சக்கர வாகனங்கள் விபத்து அபாயத்தால் மக்கள் அச்சம்

ஊட்டி:ஊட்டியில் தாறுமாறாக நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.ஊட்டி நகரில் லோயர்பஜார் சாலை, மெயின்பஜார், கமர்சியல் சாலை, எட்டின்ஸ் ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் கடை உரிமையாளர்கள், கடைக்கு வேலைக்கு வருபவர்கள் கடைகள் முன் சாலையை ஆக்கிரமித்து இரு சக்கர வாகனங்கள் நிறுத்தி செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இப்படி நிறுத்தப்படும் வாகனங்களால் பொதுமக்கள் சாலையில் நடந்து சென்று விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. புகாரின் பேரில் போலீசார் இது போன்று இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை அடையாளம் கண்டு அபராதம் விதித்தாலும், மீண்டும் அதே பகுதியில் நிறுத்தப்படுவது வாடிக்கையாக கொண்டுள்ளனர். போலீசார், நோ-பார்க்கிங் என்ற அறிவிப்பு போர்டு வைத்தாலும் நகரில் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். குறிப்பாக, லோயர் பஜார் சாலையிலிருந்து மார்க்கெட் ரவுண்டானா மற்றும் தென்றல் பஸ் ஸ்டாப் சாலையில் இடையூறாக இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவது அதிகரித்துள்ளது. மக்கள் கூறுகையில், 'போலீசார் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ