உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நீலகிரி வாழ் படுகர் மக்களுக்கு எஸ்.டி., அந்தஸ்து பா.ஜ., மட்டுமே பெற்றுத்தர முடியும்; முருகன் பேச்சு

நீலகிரி வாழ் படுகர் மக்களுக்கு எஸ்.டி., அந்தஸ்து பா.ஜ., மட்டுமே பெற்றுத்தர முடியும்; முருகன் பேச்சு

கோத்தகிரி;''நீலகிரியில் வாழும் படுக சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து பா.ஜ., வால் மட்டுமே பெற்றுத்தர முடியும்,'' என, முருகன் பேசினார்.கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் பா.ஜ., வேட்பாளர் முருகன் பொதுமக்களிடம் தீவிரமாக ஓட்டு சேகரித்தார். அனைத்து பகுதிகளிலும் அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து, உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, கோத்தகிரி சுற்றுப்புற பகுதிகளில் பா.ஜ., வேட்பாளர் முருகன் பேசியதாவது:நாட்டில் நடந்த மெகா ஊழலான, 2ஜி ஊழலில் ஒன்றரை ஆண்டு ஜெயிலில் இருந்து வந்த ராஜா, ஹிந்துக்களின் ஆன்மிக நம்பிக்கையை தரக்குறைவாக பேசுகிறார். அந்த வேட்பாளரை மக்கள் இம்முறை புறகணிப்பது நிச்சயம். நீலகிரியில் வாழும் படுக சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து பா.ஜ., வால் மட்டுமே பெற்றுத்தர முடியும்.இஸ்லாமியரான அப்துல் கலாம்; பழங்குடியின சமூகத்தை சேர்ந்த முர்மு ஆகியோரை ஜனாதிபதி ஆக்கி அழகு பார்த்தது பா.ஜ., ஆட்சியில் தான். நம் பிரதமர் மோடி ஒரு தேசியவாதி. மலைவாழ் மக்களுக்கு ஒரு லட்சம் வீடுகள், ஏழைகளின் வீடுகளுக்கு தேவையான கழிவறை, ஜல்ஜீவன் திட்டத்தில் சுகாதாரமான தண்ணீர், கேஸ் இணைப்பு வழங்கியுள்ளார்.நாட்டில் வீடு இல்லாதவர்களுக்கு கண்டிப்பாக கட்டி கொடுக்கப்படும். விவசாயிகளுக்கு ஏராளமான திட்டங்கள் பா.ஜ., அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளன. மத்தியில் ஆட்சியில் உள்ள எம்.பி., வெற்றி பெற்றால் மட்டுமே, மக்களுக்கு நலன் கிடைக்கும். கோத்தகிரி இட நெருக்கடியில் உள்ள பஸ் நிலையம் நவீனப்படுத்தப்பட்டு விரிவாக்கம் செய்து தரப்படும். இப்பகுதியில் உள்ள விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், 'மினி ஸ்டேடியம்' அமைக்கப்படும். தற்போதைய தி.மு.க., அரசு பா.ஜ., அரசின் திட்டங்களுக்கு 'ஸ்டிக்கர்' ஒட்டி ஆட்சி நடத்துகிறது. நீலகிரிக்கு அவமானம் ஏற்படுத்திய ராஜாவை தோற்கடித்து, என்னை வெற்றி பெற செய்தால், மக்களுக்காக உழைப்பேன். இவ்வாறு முருகன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை