உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டி மலை ரயில் 15ம் தேதி வரை ரத்து

ஊட்டி மலை ரயில் 15ம் தேதி வரை ரத்து

குன்னூர் : குன்னூர் நிலச்சரிவு சீரமைப்பு பணிகள் நிறைவு முழுமை பெறாததாலும், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் 15ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.நீலகிரியில் பெய்த மழையால் குன்னூர் மலை ரயில் பாதையில் ஆடர்லி அருகே 14.8வது கி.மீ. பகுதியில் கடந்த 1ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. சீரமைப்பு பணிகள் நடந்து வந்த நிலையில் 6ம் தேதி வரை ரயில் ரத்து செய்யப்பட்டது. தொடர் மழையால்சீரமைப்பு பணிகள் முழுமை பெறவில்லை. மேலும் மழை தொடர்வதால் மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் , வரும் 15 ம் தேதி வரை மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அதே நேரத்தில் ஊட்டி - குன்னூர் ரயில் தொடர்ந்து பாதிப்பு இல்லாமல் இயக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி