உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சாலை வசதி இல்லாத இந்திரா நகர் மழை காலத்தில் மக்கள் கடும் அவதி

சாலை வசதி இல்லாத இந்திரா நகர் மழை காலத்தில் மக்கள் கடும் அவதி

பந்தலுார்;பந்தலுார் அருகே இந்திரா நகர் மக்கள் சாலை இல்லாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.--நெல்லியாளம் நகராட்சியின், 7-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் இந்திரா நகர் கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. பந்தலுார் பஜார் மற்றும் நெல்லியாளம் நகராட்சி அலுவலகம் அருகே அமைந்துள்ள, இந்த பகுதியில் சாலை, குடிநீர், தெருவிளக்கு என அடிப்படை வசதிகள் செய்து தருவதில் நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது. அடிப்படை பிரச்னைகளை தீர்த்து தர வலியுறுத்தி, இப்பகுதி மக்கள் பலகட்ட போராட்டங்கள் மற்றும் மனுக்களை வழங்கியும் தீர்வு கிடைக்கவில்லை. அதில்,ஒரு பகுதி குடியிருப்புக்கு செல்லும் சிமென்ட் சாலை, தாழ்வாக செல்லும் பகுதியில் பழுதடைந்து பல ஆண்டுகள் கடந்தும் சீரமைக்காத நிலையில் இருந்தது.கடந்த வாரம் பெய்த கனமழையில் முற்றிலுமாக சேதம் அடைந்தது. இதனால் இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு வாகனங்கள் சென்றுவர முடியாத நிலையில் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், இதன் மற்றொரு பகுதியில் சாலை அமைக்காத நிலையில், மழை நீர் மற்றும் கழிவு நீர் வழிந்து ஓடும் மண் பாதையில் மக்கள் நடந்து செல்வதால் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருகிறது. இங்குள்ள குடியிருப்புகளுக்கு, கட்டணம் செலுத்திய பின்பும் குடிநீர் வழங்குவதிலும் நகராட்சி நிர்வாகம் சிக்கல் ஏற்படுத்தி வருகின்றனர். எனவே, இதுகுறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டியது அவசியம் ஆகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை