மேலும் செய்திகள்
பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்
10-Oct-2025
வீட்டை இடித்த யானைகள்; வனத்துறையினர் ஆய்வு
10-Oct-2025
அணைகள் நீர்மட்டம்
10-Oct-2025
பந்தலுார்;பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் முகாம் எருமாடு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. துனை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ்குமார் வரவேற்றார். ஊராட்சி மன்ற தலைவர் லில்லி தலைமை வகித்தார். ஆர்.டி.ஓ., செந்தில்குமார் துவக்கி வைத்து, திட்டங்கள் மற்றும் முகாம் குறித்து விளக்கி பேசினார்.வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெய்சங்கர், தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் லதா, கலால் துறை தாசில்தார் சித்தராஜ், இன்ஸ்பெக்டர் சுப்புரத்தினம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் அனிபா, உதவி வன பாதுகாவலர் கருப்பையா உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். முகாமில் பொதுமக்கள் பங்கேற்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனுக்கள் வழங்கினார்கள். அதில், ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்களுக்கு ஒரு மாத காலத்திற்குள் தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஊராட்சி துணைத் தலைவர் சந்திரபோஸ் நன்றி கூறினார்.
10-Oct-2025
10-Oct-2025
10-Oct-2025