உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / யானை வழித்தட வரைவு அறிக்கை; தமிழில் வெளியிட மக்கள் வலியுறுத்தல்

யானை வழித்தட வரைவு அறிக்கை; தமிழில் வெளியிட மக்கள் வலியுறுத்தல்

கூடலுார்;'யானை வழித்தட வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட வேண்டும்,' என, கூடலுார் ஓவேலி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடரும், மனித- யானை மோதல் சம்பவங்களை தவிர்க்க, வனத்துறையின் சிறப்பு குழு, யானை வழித்தட திட்ட அறிக்கையை தயாரித்துள்ளது. இது குறித்து பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கும் வகையில், இணையதள பக்கத்தில் திட்ட அறிக்கை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வரைவு திட்ட அறிக்கையில், கூடலுார் பகுதியில் பல கிராமங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதில், ஓவேலி பகுதியில், 31 கிராமங்களை உட்படுத்தியுள்ளனர். இந்நிலையில், இந்த திட்ட அறிக்கை தொடர்பான, ஆலோசனை கூட்டம், ஓவேலி ஆருட்டுப்பாறையில் நேற்று முன்தினம் நடந்தது. ரஞ்சித் வரவேற்றார். வரைவு திட்ட அறிக்கை மற்றும் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து போஸ் விளக்கினார்.தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:வரைவு திட்ட அறிக்கையில் உள்ள ஓவேலியின், 31 ஒரு கிராமங்கள் எவை என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்; திட்ட அறிக்கையை தமிழில் வெளியிட வேண்டும்; மக்கள் கருத்துக்களை இ-மெயிலில் பதிவு செய்ய முடியாத நிலை இருப்பதால், வனத்துறை கிராம மக்களிடம் நேரடியாக சென்று, கருத்துக்களை பதிவு செய்து அரசுக்கு அனுப்ப வேண்டும்; மக்கள் குடியிருக்கும் பகுதிகளை விரைவு திட்ட அறிக்கையில் சேர்க்கக்கூடாது என்பன உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்