உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பெருங்கோட்டுகுறுச்சி கூட்டுறவு வங்கி தலைவர் திடீர் ராஜினாமா

பெருங்கோட்டுகுறுச்சி கூட்டுறவு வங்கி தலைவர் திடீர் ராஜினாமா

பாலக்காடு : பெருங்கோட்டுகுறுச்சி கூட்டுறவு வங்கித் தலைவர் ரவீந்திரன், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதி பெருங்கோட்டுகுறுச்சி. இந்த வங்கியின் தலைவர் ரவீந்திரன். இந்நிலையில் தலைவருக்கு எதிராக, நிர்வாக குழுவில் உள்ள ஒரு பிரிவினர், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ள நிலையில், ரவீந்திரன் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.இது குறித்து ரவீந்திரன் கூறியதாவது:காங்கிரசில் இருந்து விலகிய கோபிநாதன் அளிக்கும் அழுத்தம் காரணமாக, தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன். வருகிற ஆக. 5ம் தேதி, வங்கி தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நிர்வாக குழுவில் உள்ள 11 உறுப்பினர்களில், ஏழு பேர் கோபிநாதனின் அச்சுறுத்தலுக்கு பயந்து இதற்கு ஆதரவு அளித்துள்ளனர். நிர்வாக குழுவில் உறுப்பினர் அல்ல என்றாலும், கோபிநாதனின் ஒருதலைப்பட்ச முடிவு தான் வங்கியில் எடுக்கப்படுகிறது.இதே கேள்வி கேட்டதால், எனக்கு இந்த கதி ஏற்பட்டுள்ளது. கோபிநாதன் விரும்பும் நபர்களுக்கு அதிக அளவில் கடன்கள் வழங்கப்படுகின்றன.நிர்வாக குழுவுக்கு தெரியாமல், கோபிநாத், ஊழியர்களின் உதவியுடன் பல்வேறு முறைகேடுகள் நடத்தியுள்ளதாக தெரிகிறது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை