உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / காமராஜர் அணை பகுதியில் பிளாஸ்டிக் குவியல் வன விலங்குகளுக்கு பாதிப்பு

காமராஜர் அணை பகுதியில் பிளாஸ்டிக் குவியல் வன விலங்குகளுக்கு பாதிப்பு

ஊட்டி;ஊட்டி, ஆறாவது மைல் காமராஜர் சாகர் அணை கரைப்பகுதியில் 'பிளாஸ்டிக்' கழிவுகள் குவிந்துள்ளதால், வனவிலங்குகளுக்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. ஊட்டி ஆறாவது மைல் பகுதியில் காமராஜர் சாகர் அணை அமைந்துள்ளது. முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியான இந்த அணையில் இருந்து, மின்சாரத்துக்கு தேவையான தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.எஞ்சிய தண்ணீர் சீகூர் பாலம் வழியாக, மாயாற்றில் கலந்து, பவானிக்கு செல்கிறது. கடந்த பல ஆண்டுகளாக, ஆறாவது மைல் அணையின் கரைப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து வருகிறது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் அணையில் குவிந்துள்ள குப்பைகள் வனத்துறையினால் இதுவரை அகற்றப்படவில்லை. இந்த அணை அருகே வனப்பகுதியில், புலி, சிறுத்தை, கரடி யானை மற்றும் காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் உள்ளது.வனவிலங்குகள், உணவுடன் காணப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணுவதால், உடல் உபாதை ஏற்படுவதுடன், உயிரிழக்கும் அபாயமும் உள்ளது. எனவே, பல ஆண்டுகளாக அகற்றப்படாமல் உள்ள 'பிளாஸ்டிக்' கழிவுகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ