உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மாவட்டத்தில் மூன்று பகுதிகளில் போலீஸ் அணிவகுப்பு

மாவட்டத்தில் மூன்று பகுதிகளில் போலீஸ் அணிவகுப்பு

கூடலுார் : கூடலுார், குன்னுார், கோத்தகிரியில் போலீசார் கொடி அணி வகுப்பு ஊர்வலம் நடந்தது.தமிழகத்தில் வரும், 19ல் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் ஆணையம் ஓட்டுப்பதிவுக்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.தேர்தல் அமைதியாக நடைபெறும் வகையில் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தலில், அச்சமின்றி மக்கள் ஓட்டளிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கூடலுாரில் போலீசார் கொடி அணிவகுப்பு நடந்தது. நகராட்சி அலுவலகம் அருகே துவங்கிய ஊர்வலத்தை டி.எஸ்.பி., வசந்தகுமார் துவக்கி வைத்தார். ஊர்வலத்தில், இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது, உள்ளூர் போலீசார், குஜராத் சிறப்பு படை போலீசார் பங்கேற்றனர். ஊர்வலம் மைசூரு தேசிய நெடுஞ்சாலை, பழையகோர்ட் சாலை, கோழிகோடு சாலை வழியாக சென்று துப்பு குட்டி பகுதியில் நிறைவு பெற்றது. * குன்னுாரில், 'தைரியமாக ஓட்டளிக்க வாருங்கள்; பாதுகாப்பு அளிக்க தயாராக இருக்கிறோம்,' என்பதை வலியுறுத்தி போலீசாரின் கொடி அணிவகுப்பு நடந்தது. பேரணியை எஸ்.பி . சுந்தரவடிவேல் தலைமை வகித்து துவக்கி வைத்தார். பெட்போர்ட்டில் துவங்கி மவுன்ட் ரோடு வழியாக பஸ் ஸ்டாண்டில் நிறைவு பெற்றது. டி.எஸ்.பி., குமார், இன்ஸ்பெக்டர் சதீஷ், அப்பா குன்னுார் ரவி முன்னிலை வகித்தார்.* கோத்தகிரி டானிங்டன் பகுதியில் இருந்து துவங்கிய அணிவகுப்பு காமராஜர் சதுக்கம், மார்க்கெட் பஸ் நிலையம் மற்றும் தாலுகா அலுவலகம் சாலை வழியாக ராம்சந்த் பகுதியை அடைந்தது.இதற்கான ஏற்பாடுகளை இன்ஸ்பெக்டர் ஜெயகுமார், எஸ்.ஐ.,கள் யாதவ் கிருஷ்ணன், செல்வராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை