உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கிருஷ்ண நாம ஜெபமே முக்திக்கு வழி

கிருஷ்ண நாம ஜெபமே முக்திக்கு வழி

அன்னுார்:'கிருஷ்ண நாம ஜெபமே முக்திக்கு வழி,' என, பகவத் கீதை சொற்பொழிவில் தெரிவிக்கப்பட்டது. 'இஸ்கான்' இயக்கம் சார்பில், அன்னுார், கரிவரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில், நேற்று முன்தினம் இரவு, 'கீதை காட்டும் பாதை' என்னும் தலைப்பில் சொற்பொழிவு நடந்தது.இதில் 'இஸ்கான்' மாவட்ட நிர்வாகி சீனிவாச ஹரிதாஸ் பேசுகையில், கிருஷ்ண நாம ஜெபமே முக்திக்கு வழி. தொடர்ந்து இறைவனின் நாமத்தை ஜெபிப்பதால், தீய எண்ணங்கள் தோன்றாது. மனதில் நம்பிக்கை ஏற்படும், என்றார்.'இஸ்கான்' மாவட்ட நிர்வாகி மது கோபால் தாஸ் தலைமையில், பகவத் கீதை கீர்த்தனைகள் பாடப்பட்டன. இதையடுத்து ஒரு மணி நேரம் பக்தி பஜனை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை