உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பழங்குடி கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம்

பழங்குடி கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம்

கோத்தகிரி : கீழ் கோத்தகிரி பழங்குடி கிராமங்களில், 'மக்களுடன் முதல்வர்' திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் திட்டத்தை துவக்கி வைத்து கூறியதாவது:நீலகிரி மாவட்டத்தில், 2023 டிச. 18ல் மக்களுடன் முதல்வர் திட்டம் துவக்கப்பட்டு, இந்தாண்டு ஜன., 4 வரை, 29 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. முகாம்களில், 1,932 மனுக்களில், 1,102 மனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டுள்ளது.அதேபோல, 'முதல்வரின் முகவரி' திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட, 14,414 மனுக்களில், 6,396 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதில், 640 பயனாளிகளுக்கு, 5.50 கோடி ரூபாய் மதிப்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.இரண்டாம் கட்டமாக, மாநிலத்தில், 12 ஆயிரத்து, 500 கிராம ஊராட்சிகளில், 2,500 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில், 26 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு, 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். நீலகிரியில், மகளிர் உரிமை தொகை திட்டத்தில், 1.12 லட்சம் மகளிர்; புதுமை பெண் திட்டத்தில், 1,031 மாணவியர்; விடியல் பயணத்திட்டத்தில், 50 ஆயிரம் மகளிர், காலை உணவு திட்டத்தில், 3,447 குழந்தைகள்; மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில், ஒரு லட்சத்து, 67 ஆயிரத்து,317 பயனாளிகள்; வருமுன் காப்போம் திட்டத்தில், 30 ஆயிரத்து, 653 பயணிகள் பயன் பெற்றுள்ளனர். இவ்வாறு, அமைச்சர் கூறினார்.தொடர்ந்து, பல்வேறு துறைகளில் இருந்து பெறப்பட்ட மனுக்கள் பதிவேற்றம் செய்யப்படுவதை அமைச்சர் ஆய்வு செய்தார். இதில், மாவட்ட கலெக்டர் உட்பட, அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ