உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டியில் வரும் 19ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம்

ஊட்டியில் வரும் 19ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம்

ஊட்டி:ஊட்டியில், 19ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:ஊட்டியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில், வரும், 19ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. முகாமில், '8 முதல் பிளஸ்--2 தேர்ச்சி பெற்றவர்கள், பட்டதாரிகள், பட்டிய படிப்பு படித்தவர்கள், ஐ.டி.ஐ., கம்ப்யூட்டர் இயக்குபவர்கள், டிரைவர்கள்,' என, அனைத்து விதமான தகுதியாளர்களும் கலந்து கொள்ளலாம்.முகாமில், கலந்து கொள்ள அனுமதி இலவசம். மாவட்டத்தில் தனியார் துறையில் பணிபுரிய ஆர்வம் உள்ள அனைவரும், இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். முகமின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யப்படும் வேலை நாடுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. வேலை தேடுபவர்கள், tnprivatejob.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். நீலகிரி மாவட்டத்தில், தனியார் துறை நிறுவனங்கள் முகாமில் கலந்து கொண்டு, தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.மேலும் விவரங்களுக்கு, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது 0423-2444004, 7200019666 எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை