| ADDED : ஜூன் 10, 2024 12:23 AM
பந்தலுார்:பந்தலுார் பகுதியில் நேற்று மாலை பெய்த கனமழையால், சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது.நீலகிரி மாவட்டம், பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் சாரல் மழை பெய்து வந்தது. நேற்று மாலை திடீரென கனமழை பெய்தது. இதனால், மக்கள் வெளியிடங்களுக்கு சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டது. மேலும், பந்தலுார் பஜார் ஒட்டிய குடியிருப்பு பகுதிகள் மற்றும் நீரோடைகள், வயல் வெளிகளில் மழைநீர் சூழ்ந்தது. பந்தலூர் பஜார்,, ஹட்டி செல்லும் சாலைகளில் மழை வெள்ளம் சூழ்ந்ததால், வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். மேலும், பாதசாரிகள் சாலையை கடக்க முடியாமல் திரும்பி சென்றனர். அதில், ஹட்டி செல்லும் சாலையில், கால்வாய் முறையான சீரமைக்காததால் மழை வெள்ளம் முழுவதும் குடியிருப்புகள் மற்றும் நடைபாதைகளில் நிறைந்தது. எனவே, மழைநீர் செல்லும் வகையில் கால்வாய்கள்; நீரோடைகளை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.