மேலும் செய்திகள்
பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்
10-Oct-2025
வீட்டை இடித்த யானைகள்; வனத்துறையினர் ஆய்வு
10-Oct-2025
அணைகள் நீர்மட்டம்
10-Oct-2025
கூடலுார் : கூடலுாரில் கஞ்சா விற்பனை செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட பழ வியாபாரியின், சாலையோர கடையை போக்குவரத்து போலீசார் அகற்றினார்.கூடலுார் நகரின் மையப்பகுதியில் சாலையோரம் பழக்கடை நடத்தி வந்த சாகுல் ஹமீது,48. இவர், இளைஞர்கள், மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தது போலீசாருக்கு தெரிய வந்தது. இரு நாட்களுக்கு முன்பு, கூடலுார் போலீசார் அவர் கடையை சோதனை செய்து, விற்பனைக்கு வைத்திருந்த ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, சாகுல் ஹமீதை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், மொத்த கஞ்சா வியாபாரியான கூடலுார் வடவயல் பகுதியை சேர்ந்த பிஜு, 47, என்பவரை கைது செய்தனர். இவர் மீது, கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ளது. அதே போன்று ஆந்திர மாநிலம், அனுக்காபள்ளி பகுதியில் கஞ்சா வியாபாரத்தில், 74 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு பயன்படுத்திய வழக்கும் இவர் மீது நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கூடலுார் போக்குவரத்து எஸ்.எஸ்.ஜ.,கள் ராஜ்குமார், கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார், கஞ்சா விற்பனை செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட சாகுல் ஹமீது நடத்தி வந்த பழக்கடை அகற்றினர்.போலீசார் கூறுகையில்,' கூடலுார் பகுதியில் போதை பொருட்கள் விற்பனை செய்வது தொடர்பாக தீவிர ஆய்வு நடந்து வருகிறது. இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்படுவர். தற்போது, கடை அகற்றப்பட்ட இடத்தில் இனி யாரும் கடை வைக்க கூடாது. வைத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.
10-Oct-2025
10-Oct-2025
10-Oct-2025