மேலும் செய்திகள்
காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு
6 hour(s) ago
தீபாவளி அமாவாசை பூஜை: திரளான பக்தர்கள் பங்கேற்பு
6 hour(s) ago
சாலையை சீரமைத்த இளைஞர்கள்
8 hour(s) ago
கூடலுார்;'கூடலுார் ஓவேலி மரப்பாலம் அருகே சேதமடைந்து வரும் பழமையான சுண்ணாம்பு பாலத்தை சீரமைக்க வேண்டும்,' என, வலியுறுத்தியுள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில் சாலைகள் மற்றும் ஆறுகளின் குறுக்கே பாலங்கள் அமைத்து போக்குவரத்து மேம்படுத்தியதில், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. அவைகள் இன்றும், போக்குவரத்துக்கு முக்கிய வழித்தடமாக உள்ளது.அதில், ஓவேலி ஆறுட்டுபாறைக்கு சாலை குறுக்கே சூண்டி மரப்பாலம் அருகே, ஆற்றை கடந்து செல்ல, 1899ல், இரும்பை பயன்படுத்தி பாலம் அமைத்து போக்குவரத்துக்கு பயன்படுத்தினர். 125 ஆண்டுகள் பழமையான இந்த பாலம் இன்றும் வாகன போக்குவரத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர். வரலாற்று சிறப்புமிக்க இந்த பாலத்தை அப்பகுதி மக்கள், 'சுண்ணாம்புபாலம்' என்று அழைத்து வருகின்றனர்.தற்போது, பெய்து வரும் மழையின் காரணமாக, பாலத்தின் மேற்பகுதி சேதமடைந்து, மழை நீர் குளம் போல தேங்கி நிற்கிறது. பாலத்தை கடந்து செல்ல ஓட்டுனர்கள், மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். சேதமடைந்து வரும் பழமையான இப்பாலத்தை சீரமைக்க நடவடிக்கை இல்லாததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.மக்கள் கூறுகையில்,'இந்த பாலம், 125 ஆண்டுகள் பழமையானது.இந்த பாலத்தை பாதுகாப்பது மிக அவசியம். எனவே, சேதமடைந்து வரும் பாலத்தை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
6 hour(s) ago
6 hour(s) ago
8 hour(s) ago