உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சுற்று பேருந்தால் கிராமப்புற பயணிகள் அவதி

சுற்று பேருந்தால் கிராமப்புற பயணிகள் அவதி

ஊட்டி;ஊட்டி சுற்றுப்புற பகுதிகளில் இயங்கிய, பெரும்பாலான கிராமப்புற பேருந்துகளை சுற்று பேருந்துக்கு இயக்கப்பட்டதால் கிராமப்புற பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.ஊட்டியில் கோடை சீசனை ஒட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில், 100 ரூபாய் கட்டணத்தில் அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா, தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்று பேருந்து இயக்கப்பட்டது. இந்த சுற்று பேருந்தால் சுற்றுலா பயணிகளுக்கு பயன் தருவதாக இருந்தாலும், போக்குவரத்து கழகம் கிராமப்புற பஸ் மற்றும் ரூட் பஸ்களை இயக்கியதால், பொதுமக்களுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ் கிடைக்காமல் அவதி அடைந்து வருவது வாடிக்கையாகிவிட்டது. கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அணிக்கொரை, தொரை ஹட்டி, அத்திக்கல், தும்மனட்டி, கிண்ணக்கொரை, மற்றும் குன்னூர் , கோவை வழித்தட பேருந்துகளை சுற்று பேருந்துகளாக அதிகளவில் இயக்கப்பட்டதால், கிராமப்புற செல்லும் பயணிகள் பஸ் கிடைக்காமல் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.மக்கள் கூறுகையில், 'சீசன் சமயங்களில், பொதுமக்கள் பாதிக்காத வகையில் அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் சுற்று பேருந்துகளை இயக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை