உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குடிநீர் வழங்கும் பணி களத்தில் சேவா கேந்திரம்

குடிநீர் வழங்கும் பணி களத்தில் சேவா கேந்திரம்

பந்தலுார்:பந்தலுார் அருகே அய்யன்கொல்லி பகுதியில் செயல்படும் ஸ்ரீ சரஸ்வதி விவேகானந்தா மகா வித்யாலயா நிர்வாகம் மற்றும் நீலகிரி சேவா கேந்திரம் ஆகியவை இணைந்து, இலவசமாக குடிநீர் வழங்கும் பணியை துவக்கினர். கொளப்பள்ளி பகுதியில் துவங்கிய நிகழ்ச்சியில், பள்ளி துணை முதல்வர் ரேணுகா வரவேற்றார். சேரம்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் குடிநீர் வழங்கும் பணியை துவக்கி வைத்தார். சேவா கேந்திர இயக்குனர் மனோஜ்குமார் தலைமை வகித்து பேசுகையில், ''தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், குடிக்க தண்ணீர் இல்லாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். ஒரு குடம் தண்ணீருக்காக தொலை தூரம் தேடி செல்லும் நிலை உள்ளது.இந்த நிலையை மாற்ற, சரஸ்வதி வித்யாலயா பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து, குடிநீர் இல்லாத கிராமங்களுக்கு நேரடியாக வாகனங்களில் கொண்டு சென்று இலவசமாக வினியோகிக்கும் பணி துவங்கப்பட்டு உள்ளது. மழை பெய்து மக்களுக்கு போதிய அளவு தண்ணீர் கிடைக்கும் வரை இந்த சமூக பணி மேற்கொள்ளப்படும்,'' என்றார்.இந்த பணிக்கு ஆதரவளித்த மக்கள் ஆர்வத்துடன் வந்து குடிநீரை பிடித்து சென்றனர். நிகழ்ச்சியில், சேவா கேந்திர நிர்வாகிகள் சுப்ரமணியம், கங்காதரன், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் உண்ணிகிருஷ்ணன், பள்ளி தாய்மார்கள் பிரிவு தலைவர் காந்திமதி, தலைமை காவலர் விஷ்ணு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்