உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சாலையில் ஓடும் கழிவுநீர்: சுகாதார சீர்கேடு

சாலையில் ஓடும் கழிவுநீர்: சுகாதார சீர்கேடு

கோத்தகிரி,; கோத்தகிரி அருகே, தொதநாடு மேல் கம்பட்டி கிராமத்தில், கழிவுநீர் சாலையின் மேல் ஓடுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.ஊட்டி ஊராட்சி ஒன்றியம், தும்மனட்டி ஊராட்சிக்கு உட்பட்ட, தொதநாடு மேல்கம்பட்டி கிராமத்தில், 250 குடும்பங்களில் மக்கள் வசிக்கின்றனர்.செங்குத்தான பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகளில் இருந்து, கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மேல் 'ஸ்லேப்' அமைத்து நடை பாதையாக பயன்படுத்தி வருகின்றனர்.தும்மனட்டிக்கு செல்லும் பிரதான சாலை ஓரத்தில், கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கால்வாயில் கழிவுநீர் வழிந்தோட முடியாமல், சாலையின் மேல் ஓடுகிறது. இதனால், மக்கள் நடந்து செல்ல முடியாத நிலையில், துர்நாற்றம் வீசி கொசுத்தொல்லை அதிகரித்து, பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.மககள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் வழுக்கி விழுந்து காயமடைந்துள்ளனர். கிராம மக்கள் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம், கால்வாயை சீரமைத்து கழிவுநீர் வழிந்தோட ஏதுவாக, நடவடிக்கை எடுப்பது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி