மேலும் செய்திகள்
பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்
10-Oct-2025
வீட்டை இடித்த யானைகள்; வனத்துறையினர் ஆய்வு
10-Oct-2025
அணைகள் நீர்மட்டம்
10-Oct-2025
சூலுார் : நீலம்பூரில் சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக, அவிநாசி ரோட்டில் கழிவு நீர் குளம் போல் தேங்குவதால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.சூலுார் அடுத்த அவிநாசி ரோட்டில் நீலம்பூர் ஊராட்சி உள்ளது. ரோட்டின் இருபுறமும் ஏராளமான வணிக வளாகங்கள், கடைகள், தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. ரோட்டின் வடக்கு பகுதியில் உள்ள நீலியம்மன் கோவில் அருகே சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவு நீர் கடந்த ஒரு வாரமாக ரோட்டில் ஓடி ஆங்காங்கே குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:நீலம்பூரில் ரோட்டின் வடக்கு பகுதியில் ஏராளமான கடைகள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. இங்கு உருவாகும் கழிவு நீர் அனைத்தும், கால்வாய் வழியாக அவிநாசி ரோட்டில் உள்ள சிறு பாலத்தை கடந்து தெற்கு பகுதிக்கு செல்லும். அந்த சிறுபாலத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், கழிவு நீர் வெளியேற வழியில்லாமல் ரோட்டில் ஓடுகிறது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. ரோட்டில் நடந்து செல்வோரும், வாகனத்தில் செல்வோரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். தேங்கும் கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்கள் உண்டாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தேங்கி நிற்கும் கழிவு நீரால் ரோடும் சேதமடைந்து வருகிறது. ஊராட்சி நிர்வாகம் உடனடியாக கால்வாயில் உள்ள அடைப்பை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
10-Oct-2025
10-Oct-2025
10-Oct-2025