உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / காட்டு யானைகள் நடமாட்டம் அறிய சோலார் ஹைமாஸ்ட்

காட்டு யானைகள் நடமாட்டம் அறிய சோலார் ஹைமாஸ்ட்

பந்தலுார்:நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே சேரம்பாடி வனச்சரக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், அதிக அளவில் காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. அடிக்கடி கிராமங்களில் புகுந்து பொதுமக்களை தாக்கி வரும் நிலையில், 'இரவில் தங்கள் கிராமங்களுக்கு யானைகள் வருவதை அறிந்து கொள்ள முடிவதில்லை' என, பொதுமக்கள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து, சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தலா, 2.25 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், பந்தலுார் அருகே படச்சேரி மற்றும் மழவன்சேரம்பாடி பகுதிகளில் சோலார் ஹைமாஸ்ட் தெருவிளக்குகள் பொருத்தும் பணி நடந்தது.மக்கள் கூறுகையில், 'இந்த விளக்கு பொருத்தியதால், கிராமங்களுக்கு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வருவதை இரவில் எளிதாக அறிந்து கொள்ள முடியும். இதுபோல, மாநிலம் முழுவதும் வனத்தை ஒட்டிய கிராமங்களில், இது போன்ற விளக்குகளை பொருத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை