மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
ஊட்டி : 'சுற்றுலா தலங்களில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக சிறப்பு கிரைம் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்,' என, எஸ்.பி., தெரிவித்தார். நீலகிரியில் கோடை சீசன் துவங்கி உள்ளதால் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. கேரளா, கர்நாடகா மற்றும் பிற மாவட்டத்திலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.சுற்றுலா பயணிகளின் நலன் கருதி போலீசார் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி எஸ்.பி., சுந்தரவடிவேல் கூறியதாவது: கோடை சீசனை முன்னிட்டு இரண்டு மாதங்களுக்கு கோவை சரக டி.ஐ.ஜி., உத்தரவின் பேரில் கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து போலீசார் வந்துள்ளனர்.இதேபோல், 'தமிழ்நாடு சிறப்பு போலீசார் மற்றும் நீலகிரி போலீசார்,' என, மொத்தம், 600 பேர் ஈடுபடுகின்றனர். தேவைப்பட்டால் கூடுதல் போலீசார் பணியமர்த்தப்பட உள்ளது. ஊட்டி நகர் மற்றும் சோதனை சாவடிகளில் சுமார், 1300 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக சிறப்பு கிரைம் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் முக்கிய சுற்றுலா தலங்கள் அருகில் காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. படகு இல்லத்திலும் காவல் உதவி மையம் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சுஜாதா, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பெரியசாமி, சப் இன்ஸ்பெக்டர்கள் வின்சென்ட், அருண் உட்பட பலர் இருந்தனர்.
03-Oct-2025