உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / புலிகள் தின விழிப்புணர்வு ஊர்வலம் மாணவர்கள் முகமூடி அணிந்து பங்கேற்பு

புலிகள் தின விழிப்புணர்வு ஊர்வலம் மாணவர்கள் முகமூடி அணிந்து பங்கேற்பு

கூடலுார:முதுமலை, மசினகுடியில் உலக புலிகள் தினத்தை முன்னிட்டு வனத்துறை சார்பில் நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில், மாணவர்கள் புலியின் முகமூடி அணிந்து பங்கேற்றனர்.முதுமலை மசினகுடியில், வனத்துறை சார்பில் உலக புலிகள் தினம் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. ஊட்டி சாலையில் பாலம் அருகே துவங்கிய ஊர்வலத்தை துணை இயக்குனர் அருண்குமார் துவக்கி வைத்தார்.ஊர்வலத்தில் மாணவர்கள், வன ஊழியர்கள் புலியின் முகமூடி அணிந்து, புலி பாதுகாப்பு குறித்த கோஷங்களை எழுப்பினர். ஊர்வலம் ஊட்டி தெப்பக்காடு சாலை வழியாக சென்று, மசினகுடி வன சோதனை சாவடியில் நிறைவு பெற்றது.ஊர்வலத்தில், வனச் சரகர்கள் பாலாஜி, தயானந்தர், தனபால், வன ஊழியர்கள் அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.தொடர்ந்து, மாணவர்களிடையே, புலிகள் பாதுகாப்பு குறித்த ஓவியம், பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை