உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பூங்காவை உருவாக்கிய மெக் ஐவர் 148வது நினைவு தினம் அனுசரிப்பு

பூங்காவை உருவாக்கிய மெக் ஐவர் 148வது நினைவு தினம் அனுசரிப்பு

ஊட்டி;ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவை உருவாக்கிய மெக் ஐவரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, உலக அளவில் சுற்றுலா தலமாக திகழ்கிறது. பூங்காவை வில்லியம் கிரஹம் மெக்ஐவர் என்பவர், கடந்த, 1848ம் ஆண்டு தாவரவியல் பூங்கா அமைப்பதற்கான பணிகளை தொடங்கி, உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட பல்வேறு அரிய வகை மரங்கள் நடப்பட்டு, 1867ம் ஆண்டு பணிகள் நிறைவு பெற்றன. அவர், 1876 ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி காலமானார். பூங்காவை உருவாக்கிய வில்லியம் கிரஹம் மெக்ஐவரின், 148வது நினைவு தினம் நேற்று, தோட்டக்கலை துறை சார்பில், ஊட்டி புனித ஸ்டீபன் சர்ச்சில் உள்ள அவரது கல்லறையில்,கலெக்டர் தலைமையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில்,தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சிபிலா மேரி, தோட்டக்கலை உதவி இயக்குனர் பாலசங்கர் மற்றும் பாதிரியார் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்