மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
பெ.நா.பாளையம்:வெங்காயம் பயிரிடும் போது, கைகளை பயன்படுத்தி களை எடுப்பது தான் பயிர்களை காக்க சிறந்த வழி என முன்னோடி விவசாயிகள் அறிவுரை கூறுகின்றனர்.பொதுவாக களையை கட்டுப்படுத்த, மூடாக்கு போடுவது தான் சிறந்த வழி என்பது விவசாயிகளுக்கு தெரியும். ஆனால் வெங்காயம் போன்ற பயிர்களுக்கு மூடாக்கு போட்டால், அது விரைவிலேயே அழுகிவிடும். அதைவிட களை எடுப்பதுதான் சிறந்த வழி. நிலத்தை குத்தி களையை அகற்றுவதால், மண் பொல பொலப்பு ஆகிவிடும். பயிருக்கு மண் அணைக்கும் வேலையும் முடிந்து விடும். அதனால் வெங்காயத்துக்கு கையால் களை எடுப்பதுதான் இயற்கையான தீர்வு என, முன்னோடி விவசாயிகள் கருத்து கூறினர்.
03-Oct-2025