உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வெளுத்து வாங்கிய கனமழை; விளையாடிய சிறுவர்கள்

வெளுத்து வாங்கிய கனமழை; விளையாடிய சிறுவர்கள்

குன்னுார்;குன்னுாரில் ஒரு மணி நேரம் வெளுத்து வாங்கிய கன மழையால் சாலையை வெள்ளம் மூழ்கடித்தது.குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.இந்நிலையில், நேற்று மதியம் ஒரு மணியிலிருந்து இடியுடன் கூடிய கன மழை கொட்டி தீர்த்தது. வெள்ளம் பல இடங்களிலும் ஓடியது. அதில், 'கூர்காகேம்ப்' பகுதியில் நடைபாதையில் ஓடிய வெள்ளத்தில் சிறுவர்கள் விளையாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த மழையால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்ட பல இடங்களிலும் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை