மேலும் செய்திகள்
அடிப்படை வசதிகள் கேட்டு மக்கள் காத்திருப்பு போராட்டம்
22 hour(s) ago
யானை தாக்கியதில் ஒருவர் காயம்
22 hour(s) ago
வடகிழக்கு பருவ மழை எதிரொலி; மின் நிலையங்களில் பராமரிப்பு பணி
22 hour(s) ago
ஊட்டி;நீலகிரி மாவட்டத்தில் மழை தீவிரமடையும் என்பதால், 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், பாதிப்புகளை சமாளிக்க, மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, பந்தலுார், கூடலுார், ஊட்டி மற்றும் குந்தா பகுதிகளில் மழையின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.கடந்த, 16ம் தேதி 'ரெட் அலர்ட்' அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் மழை சற்று ஓய்ந்தது. இருப்பினும், நேற்று மீண்டும் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடந்த இரு நாட்களாக, மழை தீவிரமடைந்த நிலையில், நான்கு வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை, 8:30 மணி நிலவரம் படி, அவலாஞ்சி, 216 மி.மீ; சேரங்கோடு, 126; அப்பர் பவானி, 120; பந்தலுார், 104; தேவாலா, 75; ஓவேலி, 72 மி.மீ., என, மாவட்டத்தில் சராசரியாக, 45.46 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. மழையின் போது ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க, பல்வேறு அரசு துறைகளை ஒருங்கிணைத்து பணிகளை மேற்கொள்ள மாவட்டம் நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.
22 hour(s) ago
22 hour(s) ago
22 hour(s) ago