உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மழையால் விழுந்த மரம் அகற்றிய தீயணைப்பு துறையினர்

மழையால் விழுந்த மரம் அகற்றிய தீயணைப்பு துறையினர்

குன்னுார்:குன்னுாரில் பெய்த கனமழையால் விழுந்த மரத்தை தீயணைப்புத் துறையினர் வெட்டி அகற்றினர்.குன்னுாரில் கன மழை பெய்தது. இதனால், ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழையின் காரணமாக வறண்டு காணப்பட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால், குடிநீர் வினியோகம் சீராகி வருகிறது. நேற்று மழையின் தாக்கம் குறைந்து இதமான காலநிலை நிலவியதுஇந்நிலையில், நேற்று காலை குன்னுார் கோத்தகிரி சாலையில் வண்டிச்சோலை அருகே, சாலையோரத்தில் மரம் விழுந்தது தகவலின் பேரில், தீயணைப்பு துறையினர் அங்கு சென்று மரத்தை வெட்டி அகற்றினர். ஒரு பகுதியில் மட்டுமே மரங்கள் இருந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை