| ADDED : ஜூலை 06, 2024 01:41 AM
ஊட்டி;ஊட்டியில் விதி மீறி நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு போலீசார் 'வீல் லாக்' போட்டு வருகின்றனர்.சர்வதேச சுற்றுலா நகரமான ஊட்டியில், சுற்றுலா வாகனங்கள் மற்றும் உள்ளூர் தனியார் வாகனங்கள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. வார விடுமுறை மற்றும் அரசு விடுமுறை நாட்களில், வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.நாள்தோறும் பெருகிவரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நகரப் பகுதியில் போதிய 'பார்க்கிங்' வசதி இல்லை. இதனால், நெரிசல் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.போக்குவரத்து போலீசார், நெரிசலை கட்டுப்படுத்த, திணற வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில், ஐந்தும் லாந்தர், காபி ஹவுஸ் சந்திப்பு மற்றும் சேரிங் கிராஸ் உள்ளிட்ட பகுதிகளில், வாகனங்கள் விதிமுறை மீறி நிறுத்தப்படுகிறது. இவ்வாறு வாகனங்கள் நீண்ட நேரமாக ஒரே இடத்தில் நிறுத்தப்படுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால், போலீசார் விதி மீறி நிறுத்தப்படும் வாகனங்களுக்கு 'வீல் லாக்' போட்டு வாகன உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.