உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மார்க்கெட்டில் அடுத்தடுத்து கடைகள் உடைப்பு சம்பவம்; கடை உரிமையாளர்கள் அச்சம்

மார்க்கெட்டில் அடுத்தடுத்து கடைகள் உடைப்பு சம்பவம்; கடை உரிமையாளர்கள் அச்சம்

ஊட்டி;ஊட்டி மார்க்கெட்டில் அடுத்தடுத்து கடையில் உடைக்கப்பட்ட சம்பவத்தால் கடை உரிமையாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஊட்டி நகராட்சிக்கு சொந்தமான மார்க்கெட்டில், 'காய்கறி, மளிகை, பேன்சி ஸ்டோர்,' என, ஏராளமான கடைகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர் மார்க்கெட்டில் புகுந்து அடுத்தடுத்து ஐந்து கடைகளை உடைத்து, கடையில் வைத்திருந்து, 500, 1000 ரூபாய் வரை திருடி சென்றதாக கூறப்படுகிறது. நேற்று கடைகள் உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்த கடை உரிமையாளர்கள், ஊட்டி, பி-1 போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் முரளிதரன் உத்தரவின் பேரில் போலீசார் உடைக்கப்பட்ட கடையில் ஆய்வு மேற்கொண்டனர். கைரேகை தடயங்களை சேகரித்தனர். அப்பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள மர்ம நபர்களின் நடமாட்டம் குறித்து போலீசார் விசாரணையை தீவிர படுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ