உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கல்லுாரியில் புலிகள் தின விழிப்புணர்வு கருத்தரங்கு

கல்லுாரியில் புலிகள் தின விழிப்புணர்வு கருத்தரங்கு

ஊட்டி;ஊட்டி அரசு கலைக் கல்லுாரி வனவிலங்கு உயிரியல் துறை சார்பில் உலக புலிகள் தின விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.கல்லுாரி முதல்வர் ராமலட்சுமி முன்னிலை வகித்தார். 'அப்ஸ்ட்ரீம் ஈக்காலஜி' அமைப்பின் தலைவர் காட்வின் வசந்த் பாஸ்கோ தலைமை வகித்து, சோலை மர காடுகளின் தேவை குறித்தும், அவற்றை பாதுகாப்பது குறித்தும், புலிகள் பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் பேசினார்.சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் புலிகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குறும்படம் ஒளிபரப்பப்பட்டது. முன்னதாக, புலிகள் தினத்தை முன்னிட்டு கட்டுரை கவிதை ஓவியம் மற்றும் வினாடி வினா, போட்டிகள் நடத்தப்பட்டன.இவற்றில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில், வனவிலங்கு உயிரியல் துறை தலைவர் பேராசிரியர் ராமகிருஷ்ணன், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இதேபோல், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் மாணவர்கள் மற்றும் வனப்பணியாளர்கள் பங்களிப்புடன் புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.மசினகுடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மசினகுடி சுற்றுவட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி மற்றும் பேச்சுப்போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் வனத்துறை அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ