உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அரசு கல்லுாரி சாலையில் போக்குவரத்து பாதிப்பு

அரசு கல்லுாரி சாலையில் போக்குவரத்து பாதிப்பு

ஊட்டி;ஊட்டி அரசு கலைக் கல்லுாரி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.நீலகிரியில் கோடை விழா முடிந்து சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இருப்பினும், பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், சமவெளி பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகின்றனர். இதனால், ஊட்டி முக்கிய சாலைகளில், அவ்வப்போது சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில், ஊட்டி அரசு கலைக் கல்லுாரி மைதானத்தில், பள்ளி வாகனங்கள் நேற்று ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதனால், தொட்டபெட்டாவில் இருந்து ஊட்டிக்கு வந்த அரசு பஸ்கள் உட்பட, இதர வாகனங்கள், அரசு கலைக் கல்லுாரி மாணவர் விடுதி பகுதியில் இருந்து, கலைக் கல்லூரி வழியாக, சேரிங்கிராஸ் குன்னுார் பஸ் நிறுத்தத்திற்கு வருவதற்கு ஒரு மணி நேரம் காலதாமதம் ஆனது. அப்பகுதியில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பயணிகள் கூறுகையில், 'எதிர்வரும் காலங்களில், பள்ளி பஸ்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது, நகரில் வாகன நெரிசல் ஏற்படாமல் இருக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதியில் நெரிசல் ஏற்பட்டதால், பல்வேறு பணி நிமிர்த்தம் காரணமாக வந்த மக்கள் குறித்த நேரத்துக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை