உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பர்லியாரில் போக்குவரத்து பாதிப்பு

பர்லியாரில் போக்குவரத்து பாதிப்பு

குன்னுார்:குன்னுார் மேட்டுப்பாளையம் மலை பாதையில், பர்லியார் பகுதியில் இருந்த சோதனை சாவடி கல்லாறு பகுதிக்கு மாற்றப்பட்டது.இதனால் பார்லியாரிலிருந்தகாவல் நிலைய அறைகள் தற்காலிகமாக மூடப்பட்டு பூட்டு போடப்பட்டது. இதன்பிறகு இந்த பகுதியில் இரவு நேரங்களில் கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.குறிப்பாக கனரக வாகனங்கள் இரு இரு புறங்களில் இருந்தும் வரும்போது பாலத்தில் சிக்கி இரண்டு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது.தற்போது, கோடை சீசனை முன்னிட்டு 75 சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்கப்படும் நிலையில் பர்லியாரில் உணவிற்காக நிறுத்தும்போது போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது.போக்குவரத்தை சீர் செய்ய இங்கு போலீசார் இல்லாததால், தினமும் டிரைவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவாகிறது.எனவே, இந்த பகுதியில் பூட்டப்பட்டுள்ள காவல் துறை அறைகளை திறப்பதுடன் போக்குவரத்தை சீர்படுத்த போலீசாரை நியமிக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ