| ADDED : ஆக 09, 2024 01:48 AM
பந்தலுார்;பந்தலுார் அருகே கவுன்சிலரை தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டனர்.நெல்லியாளம் நகராட்சியின், 11-வது வார்டு கவுன்சிலர் ஆலன்,54. இவரை நேற்று முன்தினம் மதியம் நகராட்சி அலுவலக வளாகத்தில் வைத்து ஒப்பந்ததாரர்கள் இருவர் தாக்கியுள்ளனர். அவரை காப்பாற்ற முயன்ற நகராட்சி தலைவரின் உதவியாளர் சைபுல்லா, 37, என்பவரும் தாக்குதலுக்கு உள்ளானார். காயமடைந்த இருவரும், பந்தலுார் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, கேரள மாநிலம் வயநாட்டில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த புகாரில் தேவாலா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், கவுன்சிலர் மற்றும் தலைவரின் உதவியாளரை தாக்கிய ஒப்பந்ததாரர்கள், தேவாலா பகுதியை சேர்ந்த சக்கீர் உசேன்,47, பந்தலுாரை சேர்ந்த அபுதாஹீர்,41, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.