உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சீரமைத்தும் திறக்கப்படாத பைக்காரா சாலை வருமானமின்றி தவிக்கும் தொழிலாளர்கள்

சீரமைத்தும் திறக்கப்படாத பைக்காரா சாலை வருமானமின்றி தவிக்கும் தொழிலாளர்கள்

ஊட்டி;சீரமைக்கப்பட்ட பைக்காரா சாலை திறக்கப்படாததால், படகு சவாரி பணி உட்பட பிற பகுதிகளில் ஈடுபட்ட தொழிலாளர்கள் வருமானமின்றி பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணியர் பைக்காரா படகு இல்லத்திற்கு சென்று படகு சவாரி செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். பைக்காரா சந்திப்பிலிருந்து பைக்காரா படகு இல்லம் வரை, 2 கி.மீ., துாரம் சாலையை சீரமைக்க, வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இப்பணியை ஒட்டி கடந்த நான்கு மாதங்களாக படகு சவாரி நிறுத்தப்பட்டு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது பணிகள் முடிந்து ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் இன்னும் திறக்கப்படவில்லை. குறிப்பாக, கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து வரும் சுற்றுலா பயணியர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.மேலும், படகு சவாரி உட்பட பிற பணியில் ஈடுபட்ட 50 குடும்பங்களை சேர்ந்த மக்கள், நான்கு மாதங்களாக பிழைப்பின்றி வருமான இல்லாத நிலையில் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர். தொழிலாளர்கள் கூறுகையில், ' சீரமைக்கப்பட்ட சாலையை பயன்பாட்டுக்கு கொண்டு வர, வனத்துறை; சுற்றுலா துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை