உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நடவு செய்யாத மரக்கன்றுகள்: கருகி அழியும் அபாயம்

நடவு செய்யாத மரக்கன்றுகள்: கருகி அழியும் அபாயம்

பந்தலுார்;பந்தலுார் அருகே கப்பாலா, பழங்குடியினர் கூட்டுறவு சங்க தேயிலை தோட்டத்தில், வனத்துறை மூலம் வழங்கப்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்யாமல் கருகி காய்ந்து வருகிறது.மரம் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் வனத்துறை மூலம், ஒவ்வொரு பகுதிகளும் மரக்கன்றுகள் நடவு செய்ய தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.அதில், தனியார் தேயிலை தோட்டங்களில், விவசாயிகளுக்கு மரக்கன்று வழங்கி அவர்கள் மூலம் நடவு செய்து பராமரிக்கப்பட்டு வருகிறது.வனப்பகுதிகள் மற்றும் சாலை ஓரங்களில் நடவு செய்யப்படும் மரக்கன்றுகள், கோடை காலங்களில் காட்டுத் தீயில் கருகி காணாமல் போய்விடுகிறது.இந்நிலையில், பந்தலுார் அருகே கப்பாலா பகுதியில் செயல்படும், பழங்குடியினர் கூட்டுறவு சங்க தேயிலை தோட்டத்தில் நடவு செய்வதற்காக, வனத்துறை மூலம் கொண்டு வந்து வைக்கப்பட்ட மரக்கன்றுகள், நடவு செய்யாமலே காய்ந்து கருகி வருகிறது.மரக்கன்றுகளை வளர்ப்பதற்காக ஊக்குவிக்க வேண்டிய நிலையில், மரக்கன்றுகள் காய்ந்து கருகி வருவது குறித்து வனத்துறை கண்டு கொள்ளாதது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை