உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டியில் நாளை துணைவேந்தர்கள் மாநாடு துவக்கம்

ஊட்டியில் நாளை துணைவேந்தர்கள் மாநாடு துவக்கம்

ஊட்டி:ஊட்டி ராஜ்பவனில் ஆண்டு தோறும் அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் மாநாடு நடக்கிறது. நடப்பாண்டு மாநாட்டை, கவர்னர் ரவி, நாளை, 27ம் தேதி தொடங்கி வைக்கிறார்.மாநாட்டில், ஆராய்ச்சியின் சிறப்பம்சம், நிறுவன மேம்பாடு, தொழில் முனைவோர் ஊக்குவிப்பு, ஆசிரியர் உறுப்பினர்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் உலகளாவிய மனித வளங்களை ஊக்குவித்தல் குறித்து விரிவான விவாத விளக்கங்கள் மேற்கொள்வதே இந்த மாநாட்டின் நோக்கமாகும்.மாநாட்டில் தொடக்கம் மற்றும் நிறைவு விழாவில் கவர்னர் ரவி பேசுகிறார். மாநாட்டின் தொடக்க அமர்வில் பல்கலைக்கழக மானிய குழு தலைவர் பேராசிரியர் ஜெகதீஷ் குமார் பங்கேற்று சிறப்புறையாற்றுகிறார்.பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் பேராசிரியர்கள் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றுகின்றனர். மாநாட்டில் பங்கேற்க மாநில கவர்னர் ரவி நேற்று மாலை ஊட்டி ராஜ்பவனுக்கு வந்தார். அவர், இம்மாதம், 30ம் தேதி ஊட்டியிலிருந்து சென்னை செல்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி