உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / விநாயகர் கோவில் திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

விநாயகர் கோவில் திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

பந்தலுார்;பந்தலுார் விநாயகர் கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.பந்தலுார் அருகே சேரம்பாடி பகுதியில் பிரசித்தி பெற்ற விநாயகர் கோவில், 34- வது ஆண்டு தேர் திருவிழா கடந்த, 19ஆம் தேதி காலை மகா கணபதி ஹோமம் சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது. தொடர்ந்து கொடியேற்றுதல் தீபாராதனை கரகம் பாலித்தல் நிகழ்ச்சிகள் நடந்தது.20-ம் தேதி காலை, அம்மன் ஹோமம் மற்றும் விசேஷ பூஜைகள், இரண்டாம் கால யாக பூஜை, மதிய கால பூஜை, தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. அன்று இரவு உள்ளூர் குழந்தைகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் அதிகாலை சிவ ஹோமம் மற்றும் தீபாராதனை சிறப்பு பூஜைகள் மதியம் அன்னதானம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து விளக்கலாடி ஆற்றங்கரையிலிருந்து பறவை காவடி ஊர்வலம், வேல் பூட்டிய ரதங்கள், பூக்காவடி, செண்டை மேளம், நடன நிகழ்ச்சிகளுடன் கோவிலுக்கு ஊர்வலம் வந்தது. மாலை, 6:00 மணிக்கு சிறப்பு பூஜையுடன், பொது ஏலம் மற்றும் வாணவேடிக்கை நிகழ்ச்சியும், தொடர்ந்து இசை நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று சிறப்பு பூஜைகளும்,தேர் பவனி, தாளம் எடுத்தலும், இன்று காலை தீபாராதனை, மாவிளக்கு பூஜை, அம்மன்குடிவிடுதலுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் மற்றும் விழா கமிட்டியினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை